ஜோஸ்யம் பொய்யான கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது ஜோசியமும் சிலசமயம் பொய்யாகும் எப்பேர்பட்ட ஆருடமும் பொய்யாகும் என்பதைப் பற்றி விளக்கும் கதை

ஒரு ஊரில் ஒரு பிரபலமான ஜோதிடர் இருந்தார் அவர் ஜாதகம் நாடி ஜோசியம் ஆரூடம் சோழி திரிகால ஞானம் அனைத்தும் கற்றிருந்தார். அவர் கூறினார் என்றால் நடக்காது என்பது இல்லை என்று மக்களிடம் பரவலாக பேச்சு இருந்தது.

ஆகவே அவருக்கு நல்ல பெயர் ஊரில் இருந்தது. அவர் சொன்னால் பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதை கேட்டு அவரைக் காண மிகவும் கஷ்டப்பட்ட ஒரு ஏழை கிராமத்திலிருந்து தனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவரைக் காண வந்தார்.

அவர் ஜோதிடரை காணச் சென்ற பொழுது பொழுது சாய்ந்துவிட்டது .அவர் ஜாதகத்தை பார்த்து ஜோசியர் மிரண்டு விட்டார்.காரணம் இன்று இரவுடன் அவருடைய ஆயுள் முடிகிறது ஒரு கருநாகம் தீண்டி இறக்க வேண்டும் என்று இருந்தது .அந்தச் செய்தியை அவரிடம் கூற வேண்டாம் என்று நினைத்து ஜாதகத்தை வாங்கி வைத்துக்கொண்டு இன்று பொழுது சாய்ந்துவிட்டது .நீங்கள் நாளை காலை வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார் .அவரும் சரி என்று சென்று விட்டார்.

அந்த அந்திப்பொழுதில் கிராமம் நோக்கி செல்கையில் வழியில் பலத்த காற்றுடன் இடியுடன் மழை பெய்தது .ஆகவே தொடர்ந்து அவரால் நடக்க முடியவில்லை .என்ன செய்வது என்று யோசித்து அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோயிலில் கர்ப்பகிரகத்திற்குள் சென்று தங்கிக் கொண்டார்.

வெளியே காற்று மழை மின்னல் அவர் கர்ப்பகிரகத்திற்குள் இருந்துகொண்டு அந்தக் கோயிலை சுற்றி முற்றும் பார்க்கிறார். மின்னலின் வெளிச்சத்தில் அங்கு  கோயில் சிதைந்து கிடக்கிறது .இறைவனின் சிலை உடைந்து கிடக்கிறது. உடனே அவர் மனதில் நினைக்கிறார் இறைவா எனக்கு மட்டும் பணம் இருந்தால் செல்வம் இருந்தால் இந்தக் கோயிலை  இடித்துவிட்டு அனைத்தையும் மீண்டும் கட்டி நன்கு   கும்பாபிஷேகம் செய்து உங்களுக்கு அனைத்து அபிஷேக அர்ச்சனை ஆராதனைகளை விடாமல் தவறாமல் செய்வேன் இறைவா. கும்பாபிஷேகத்திற்கு முன்வாசல் பின்வாசல் என்று ஒரு கோயிலை எவ்வாறு கட்ட வேண்டும் நிர்மாணிக்க வேண்டும் அனைத்தையும் மனதினால் நினைத்துக் கொண்டு  இருந்த பொழுது திடீரென்று ஒரு கருநாகம் அவர் முன்னால் தோன்றி அவரை கொத்த வந்தது.

அவர்  பதைபதைத்து வெளியே ஓடி வந்தார் .அந்த நேரம் பார்த்து கோயில் சுவர் இடிந்து நாகத்தின் மேல் விழுந்து நாகம் மடிந்து விட்டது.பின் பொழுது விடியும் வரை அவர் கோயிலிலேயே இருந்து பொழுது விடிந்தவுடன் ஊருக்குச் செல்லாமல் மீண்டும் ஜோசியரை காண வந்தார்.

இவரை பார்த்தவுடன்  ஜோசியருக்கு வெலவெலத்து விட்டது .அவரை உட்கார வைத்துவிட்டு மீண்டும் தனது அறைக்குள் சென்று அனைத்து நாடிகளையும் ஏடுகளையும் சோழிகளையும் புரட்டிப்பார்த்து இறுதியாக திரிகால ஞானம் ஆருடமும் பார்த்தார்.எவ்வாறு தன் ஜோசியம் பொய்த்ததுஎன்று திரிகாலஞான  ஆருடம் பார்க்கும் போது இந்த ஜாதகத்திற்கு உரியவர் இன்றிரவு மரணிக்க வேண்டும் அவ்வாறு மரணிக்காவிடில் இவர் ஒரு கோயில் கட்டி  கும்பாபிஷேகம்  செய்திருக்க வேண்டும் என்று உள்ளது.

இவருக்கு ஒரே ஆச்சரியம் ஒரே இரவில் ஒருவர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து இருக்க முடியுமா .சரி என்ன நடந்தது என்று அவனிடமே  விசாரிப்போம் என்று வெளியில் வந்து அவரிடம் நேற்று நீ எனது வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் இங்கு வருவது வரை என்ன நடந்தது என்று ஒரு வரி விடாமல் கூறுவாயாக என்று கூறினார்.

அவனும் புயலில் கர்ப்பக்கிரகத்தில் நுழைந்தது முதல் மனதில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததையும் கருநாகம் கடிக்க வந்ததையும் கோயில் இடிந்து விழுந்து அது இறந்ததையும் அனைத்தையும் கூறினான்.

உடனே அவன் ஜாதகத்தை அவன் கையில் கொடுத்து உனக்கு இனி சாவு என்பதே இல்லை நீண்ட  நீண்ட நெடுங்காலம் வாழ்வாயாக .சகல வசதிகளுடனும் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் ஐஸ்வர்யத்துடனும் வாழ்வாய் என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் தெய்வத்தின் கருணை கடாட்சம் அருள் அனுக்கிரகம் இருந்தால் சாவையும் நாம் வெல்லலாம் .தெய்வத்தின் கருணை ஒன்றே போதுமானது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

இதுவே ஜோசியம் பொய்யான கதை

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்