மேலக் கோட்டை தலக்காடு மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது கர்நாடக மாநிலத்தில் மேலக்கோட்டைக்கருகில் உள்ள புகழ்பெற்ற கோயில் தலக்காடு என்பதாகும்.அதன் தல வரலாறு தல புராணம் எல்லாம் பார்ப்போமா.

தலக்காடு.  பெயர்க் காரணம்.

அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவில் ஒரு மரம் ஓங்கி வளர்ந்து இருந்தது. அந்த மரத்திற்கு ஒரு யானை தினமும் தன் துதிக்கையால் அடுத்து உள்ள ஆறு/ஏரி/குளம்/குட்டை/ஓடை எங்கிருந்தாவது நீர் கொண்டு வந்து அந்த மரத்தின் அடியில் ஊற்றிக் கொண்டு இருந்தது.இதை இரு வேடர்கள் தினமும் கண்டு கொண்டு இருந்தனர்.‌ அதில் ஒருவர் பெயர் தல மற்றவன் பெயர் காடே. தினமும் யானை நீர் ஊற்றுவதைக் கண்ட வேடர்கள் என்ன விஷேசம் என்று அறிய அவ்விடத்தை தோண்டினர். அதனடியில் ஒரு லிங்கம் இருந்தது. இவர்கள் கோடாரியால் தோண்டும் பொழுது கோடாரி லிங்கத்தின் மேல் பட்டு ரத்தம் பீறிட்டு கிளம்பியது.அது கண்டு இருவரும் மயங்கி விழந்தனர்.

அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது.நீங்கள்பயப்பட வேண்டாம். இந்த மரத்தின் இலைகளை எடுத்து லிங்கத்தின் மேல் வைத்தால் ரத்தம் நின்றுவிடும். அதுவே ஔஷதம். அந்த பச்சிலையே மருந்து என்று கேட்டனர். அவர்கள் அவ்வாறே செய்ய உடனே ரத்தம் வருவது நின்றது. அந்த இடம் அன்றிலிருந்து அவர்கள் பெயராலேயே அழைக்கப்படுகிறது.  தல+காடே= தலக்காடே ஆகி பின் மருவி தலக்காடு என்று ஆனது.

மேலும் அந்த ரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது.
அந்த ரத்தம் மேடு பள்ளங்களில் உருண்டு ஓடியதால் அது ஓடிய இடமெல்லாம் ஓரோரு லிங்கம் உருவானது.  ரெண்டு பள்ளத்திலும் ரெண்டு மேட்டிலும் ஒன்று சமதரையிலும் ஓடி அஞ்சு லிங்கம் அதாவது பஞ்ச லிங்கம் என்று ஆனது.அதன்பெயர்கள்வருமாறு
மணலீஸ்வரர்.  பாதாளீஸ்வரர்.  அகத்தீஸ்வரர். குணந்தீஸ்வரர் மருந்தீஸ்வரர் அதாவது வைத்தீஸ்வரர் ஆனது.

மேலும் அந்த இடம் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால் இவர்கள் பெயரிலேயே தலக்காடு என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரது சிலையும் கோயில் முன் ரெண்டு பக்கமும் உள்ளது.

இனி அந்த ஊரின் விஷேசம் சாபம் பற்றி பார்ப்போம்.

அந்த ஊரின் ராஜா ராணி கோவிலுக்கு எக்கச்சக்க சொத்து எழுதி வைத்தனர்.
பின்னாளில் முகமதியர் படையெடுப்பால் ராஜா கொல்லப்பட ராணி அனைத்து செல்வங்களையும் தங்கம்/வைரம்/வைடூரியம் முதலிய அனைத்தும் எடுத்துக் கொண்டு முகமதியர்கள் கையில் சிக்காதவாறு தப்பித்து தலக்காட்டுக்கருகில் மாலிங்கா என்ற ஊரில் அனைத்து செல்வங்களுடன் வசித்து வந்தார்.

அப்பொழுது மைசூர் மஹாராஜா சாம்ராஜ் உடையார் ஒரு நாள் ஆலய தரிசனத்திற்கு வந்தார். அப்பொழுது அமைச்சரும் அதிகாரிகளும் இந்த ஆலயத்தின் செல்வம் அனைத்தும் ராணியிடம் உள்ளது.அனைத்தும் இருந்தால் ஆண்டவனுக்கு அணிவித்து அழகு பார்க்கலாம் என்று கூறினார் கள்.
உடனே ராஜா மந்திரி தலைமையில் சிலரை அனுப்பி நகைகளை கேட்டு வாங்கி வரும்படி கூறினார். மந்திரியும் சென்று கேட்ட போது ஒரேயொரு மூக்குத்தி மட்டும் குடுத்து அனுப்பினார் ராணி.

அது கண்டு வெகுண்ட ராஜா அவளைக் கொன்றாவது அவளது செல்வங்களைப் பறித்து வாருங்கள் என்று கூறி ஒரு படையை அனுப்பினார். அதைக் கேள்விப்பட்ட ராணி அனைத்து செல்வங்களையும் ஒரு துணியில் கட்டி ஒரு நதியில் வீசி எறிந்து தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். குதிக்கும் முன்பு இந்த இடம் முழுவதும் மண் மூடிப் போகட்டும் மணல் மேடாகட்டும் மேலும் மஹாராஜா சாம்ராஜ் உடையார் வம்சமே விருத்தி ஆகாமல் (வம்சமே உண்டாகாமல்) போகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டு குதித்தாள்.

அன்று முதல் இன்று வரை அந்த ராணி கொடுத்த சாபம் பலித்துக் கொண்டு தான் இருக்கிறது. எங்கிருந்து மணல் வருகிறது என்று இன்று வரை தெரியவில்லை ஆனால் மணல் வந்து அனைத்து லிங்கங்கள் உட்பட மூடிவிடுகிறது.  நாங்கள் சென்ற சமயம் ஒரு 2அல்லது3 கி.மி.மணலில் செருப்பில்லாமல் தான் நடந்து சென்றோம். 2003 வரை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு லிங்கங்கள் அனைத்தையும் மூடி விடும் அரசாங்கம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மணலை அகற்றி சுத்தம் செய்யும்.தற்போது ஆர்க்கலாஜிகல் மேற்பார்வையில் மணல் மூடாதவாறு பார்த்துக் கொள்கிறது. இருந்தும் பள்ளத்திலும் சமதரையிலும் உள்ள மூன்று லிங்கங்கள் இப்பவும் மூடித் தான் போகிறது.

இதில் அதிசயம் என்னவென்றால் அன்றிலிருந்து இன்றுவரை மணல் எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பது புரியாத புதிர் ஆகவே உள்ளது. யார் யாரெல்லாம் என்னென்னவோ முயற்சி செய்தும் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல முன்னூறு ஆண்டுகளாக சாம்ராஜ் உடையார் வம்சமே விருத்தி ஆகாமல் இருந்தது . அவர்கள் பரம்பரை பரம்பரையாக தத்து எடுத்து தான் ஆண்டு வந்தனர். இப்போது கடைசியாக 1993 ல் இருந்து தான் முதன் முறையாக வம்சம் உண்டானதாக கூறுகின்றனர்.

மேலும் 2003ல் கர்நாடக அரசாங்கம் மேற்பார்வையில் மணலை வாரம் ஒரு முறை அகற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மணலை உபயோகப் படுத்தி சில பல கம்பெனிகள் சிலிக்கான் முதலியன செய்ய முற்பட்டது. ஆனால் விளைவுகள் மோசமானதால் அந்த முயற்சியை கை விட்டனர்.

இன்றும் தலக்காட்டில் பஞ்ச லிங்கத்தை தரிசனம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் ரெண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் மணலில் நடக்கவேண்டும்.அவ்வாறு நடந்து சென்று தான் தரிசிக்க வேண்டும்.

இது தான் தலக்காடு தல புராணம்.தல காடு சிலைகள் ஆலயத்தின் முன் உள்ளது.அவர்கள் பெயராலேயே அந்த இடம் தலக்காடு என்று அழைக்கப்படுகிறது.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்