குறும்புக் குழந்தைகள்

#குறும்புக் குழந்தைகள்
#குறும்புக் குழந்தைகள்

என் பையன் அருண் பிறந்தது மார்ச் மாதம் 83ம் வருடம்.அப்ப நான் ராஜஸ்தான்ல பிக்கானீர் ல இருக்கேன் 1st அக்டோபர் 84ஆம் வருஷம் நான் சூலூருக்கு டிரான்ஸ்பர் ஆகி வரேன்.85 ஆம் வருஷம் ஜூலை மாசம் ஏர்போர்ஸ்ல் உள்ள  ஸ்கூல்ல நான் அவனை ப்ரீகேஜிக்கு  கூட்டிட்டு போறேன்.

அங்க உள்ள போனவன் இருக்கிற விளையாட்டு பொம்மைகளில் ஏறிகிட்டு ஸ்கூல்ல இருந்து வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். ஒன்றரை மணி வரைக்கும். அப்புறம் நாளைக்கு அப்பா கூட்டிட்டு வருவார் என்று மிஸ் சமாதானம் செய்ய சிரமப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அப்புறம் ஜூலை மாதம் 25ம் தேதி ஸ்கூல் தொடங்கியது. அவனை நாங்கள் ப்ரீ கேஜில் சேர்த்துவிட்டோம் .அக்டோபர் மாசம் என்று நினைக்கிறேன். இவன் ஏர்போர்ஸ் கோட்டர்ஸ்ல் இருந்து  ஸ்கூலுக்கு ஒரு டிரான்ஸ்போர்ட் ஸ்கூல் வேன் வரும். அவனுக்கு எந்த கிளாஸோ அதற்கு ஏற்ப பேட்ச் அணியக் குடுப்பார்கள்.அதற்கு ஏற்ப வேனும் இருக்கும். அதுல ஏறினால் சரியாக இறங்க வேண்டிய இடத்தில் ஒன்றரை மணி என கரெக்டா கொண்டு வந்து எங்க கோர்ட்டர்ஸ்ல்  விட அங்கு காத்திருக்கும் என் மனைவி போய் கூட்டிட்டு வருவாள்.

ஒரு நாள் ஒன்றரை அல்ல ரெண்டு மணி வரைக்கும் குழந்தை வரவில்லை. மனைவிக்கு அங்கிருந்து ஒரே அழுகை .அப்புறம் அங்கிருந்தவர்கள் எல்லாம் சொல்லி எனக்கு போன் பண்ண அடிச்சு கட்டிட்டு வந்து ஸ்கூலுக்கு போக ஸ்கூல்ல எல்லாரையும் பிடிச்சு   என்ன ஏதுன்னு கேட்க ஒன்னும் புரியல .கடைசியில் அந்த வண்டி ஓட்டின  டிரைவர் யாரென்று தெரிந்து அவரை காண்டாக்ட் பண்ண சரிங்க ஒரு பையனை என்  முன்னாடி  உக்கார வெச்சிருக்கேன் .அவன் கிட்ட அப்பா பேரு என்னனு கேட்டேன். அவன் சந்தோசமா சிரிச்சுகிட்டே எங்க அப்பா பேரு வாசுதேவன் என்று சொன்னான். நானும் சிரிச்சுகிட்டே அவர எனக்கு தெரியும் பத்திரமா கூட்டிட்டு வரேன்னு சொன்னார்.

அப்பத்தான் எங்களுக்கு மூச்சே வந்தது. அப்புறம் நான் போய் அந்த வேன் டிரைவரை பார்த்து என் பையன கூட்டிட்டு வந்து சேர்ந்தோம் இது நடந்தது 85 ஆம் வருடம் அக்டோபர் மாதம்.

86ம்  வருடம் ஜூலை மாதம் அவனை  சூலூரில் உள்ள ஆர் வி எஸ் ஸ்கூலில் சேர்த்தோம்.அங்கு அனைவருக்கும் அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு ஸ்கூல் பேட்ச் கொடுத்திருந்தார்கள்அதேபோல் ஒரு நாள் அவன் சூலூரில் இறங்க வேண்டிய வேனுக்குப்  பதிலாக பல்லடம் செல்லும் வேனில் ஏறிவிட்டான்.வழக்கம்போல் நிற்குமிடத்திற்கு என் மனைவி செல்ல அங்கு இல்லை என்று சொல்ல பிறகு எனக்கு தகவல் கொடுக்க நான் ஆர்விஎஸ் பள்ளி செல்ல என் மனைவி அதற்குள் ஆட்டோ பிடித்து அங்கு வர கியோ முறையோ என்று ஒரே சத்தம். உடனே ஹெட்மாஸ்டர் வந்து ஒன்னும் கவலைப்படாதீங்க. எங்கும் போக மாட்டான். எங்க வண்டி  டிரைவர் தவறான இடத்தில் இறக்கி விடமாட்டார் அவர் மிகவும்  திறமையானவர் என்று சொல்ல சற்று சாந்தமாக இருந்தது. அவனிடம்  அந்த  டிரைவர் அப்பா பெயர் என்ன எங்க வீடு என்று கேட்க அவன் எங்க அப்பா பேரு  வாசுதேவன் வீடு சூலூர் என்று சொல்ல பத்திரமாக அவனை திரும்ப ஸ்கூலுக்கு கொண்டுவர நாங்கள் ஸ்கூலிலிருந்து அவனை கட்டி அணைத்து ஆரத் தழுவி வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்தோம்.

அன்றிலிருந்து அவனது பிரண்டு பக்கத்து வீட்டுப் பெண் எல்லோரும் ஏண்டா உன் வீடு பல்லடமா சூலூரா என்றுஅனுதினமும் கிண்டல் செய்ய ஆரம்பிக்க ஒரு வருடம் அது தொடர்ந்தது. மிகவும் சந்தோசமாக இருந்தது.

கழிந்துவிட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் தொகுத்துக் கூறும் போது மனது சந்தோசமாக இருந்தாலும் அந்தக் கண நேரத்தில் பட்ட துன்பமும் வலியும் சங்கடமும் என்றும் மாறாது மாறாது .இன்று இதைக் கூறும் பொழுது ஒரு மலரும் நினைவுகளாக தோன்றினாலும் அன்று நடந்த நேரத்தில் மகனை காணவில்லை என்ற போது மனம் துடித்து துவண்டு அதை நினைத்தால் இன்றும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

இதுவும் ஒன்று என் மகனின் குழந்தை பருவத்தில் நடந்தது.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்