பகவானை ஏமாற்றிய பக்தனின் கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது பகவானை ஏமாற்றிய பக்தனின் கதை

பொதுவா பகவான் தான் எல்லோருக்கும் அருள் தருவார். காட்சி தருவார் .எல்லா வரமும் தருவது ஆனால் இங்கே ஒரு பக்தன் பகவானை ஏமாற்றினான் . இந்த காலத்து பசங்க சொல்ற மாதிரி பகவானுக்கு அல்வா குடுத்துட்டான் .அது எப்படிங்கிறத சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

காஞ்சிபுரத்துல குமரகோட்டத்து பக்கத்துல மூங்கில் மண்டபத்துக்குப் பக்கத்திலிருந்த  ஒரு சந்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். அவர் தினமும் அடுத்துள்ள கந்தகோட்டம் வழக்கறுத்தீஸ்வரர் அஷ்டபுஜம் காஞ்சி காமாட்சி பாண்டவ பெருமாள் கோயில் எல்லாத்துக்கும் தினமும் சென்று இறைவனை தொழுது வருவது அவரது வழக்கம்.

ஒருமுறை பாண்டவ பெருமாள் கோயிலில் இருந்து இறைவனை தொழுது வரும் பொழுது அவருக்கு ஒரு சிறு கஷ்டம் ஏற்பட்டது .பெருமாளே எனக்கு ஒரு நூறு ரூபாய் இருந்தா இன்னைக்கு கொஞ்சம் கஷ்டம் தீரும் பார்த்து ஏதாவது அருள் செய் என்றார். அவர் தொழுது விட்டு வெளியில் வரும்போது ஒரு நூறு ரூபாய் நோட்டு கீழே கிடந்தது .அதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்து அன்றிலிருந்து தவறாமல் பாண்டவ பெருமாள் கோயில் சென்று தொழுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒருமுறை அவருக்கு மிகுந்த பணக்கஷ்டம் ஏற்பட்டது உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அவர் பாண்டவ பெருமாளிடம் வந்து எனக்கு உடனடியாக 2 லட்சம் தேவை தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று கேட்டார். பெருமாள் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் இரண்டு நாள் ஆச்சு. அப்பத்தான் இவரு யோசிச்சாரு .மனுஷனுக்கே ஏதாவது வேணும்னா எதாவது சம்திங் சம்திங் குடுத்தா தான் காரியமாகும்.

அதுபோல இறைவனும் நினைச்சிட்டு இருக்காரோ என்னமோ .நம்ம அப்ப இறைவனுக்கு ஏதாவது கொடுத்து நம்ம காரியத்தை சாதிக்கலாம் ன்னு நினைச்சுட்டு பெருமாள் கிட்ட போய் பெருமாளே இன்னைக்கு ராத்திரிக்குள்ள எனக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைக்க வச்சுட்ட என்றால்  நான் உனக்கு நாளைக்கு சிட்டிகைச் சப்பரம்   பண்ணி போடறேன்னு சொன்னார்.

பெருமாளுக்கு ஒரே ஆச்சரியம் என்னடா இது அவனவன் தங்கம் வைரம் வைடூரியம் மாணிக்கம் மரகதம் பவளம் முத்து என்னெல்லாமோ பண்ணி போடுவானுங்க. இவர் என்னடான்னா புதுசா சிட்டிகை சப்பரம் னு சொல்றாரு .இதுவரை கேள்விப்படாத ஒன்றா இருக்கிறது .அது என்னவா இருக்கும் அப்படின்னு பெருமாள் கொஞ்ச நேரம் முழிச்சாரு. அவருக்கு அதற்கு விடை தெரியல. சரி இவனுக்கு இவனதுதேவையை பூர்த்தி செய்து தான் பார்ப்போம் .என்ன தான்  பண்றான்னு ன்னு சொல்லிட்டு அன்னைக்கு இரவு அவனுக்கு  இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு பண்ணிட்டார்.

அவனும் மிக மகிழ்ந்து பெருமாளே மிக்க நன்றி என் தேவையை பூர்த்தி செய்த .நாளை காலையில நான் சொல்லியபடி உனக்கு சிட்டிகை சப்பரம் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு படுத்துட்டான். பெருமாளுக்கு ஒரே சந்தோஷம். இவன் எப்படி எல்லாம் சிட்டிகை சப்பரம்  பண்ண போறான்னு ராத்திரியெல்லாம் என்ன பண்றான்னு முழிச்சு பாத்துட்டு இருந்தாரு. ஆனால் அவனோ நிம்மதியா படுத்து தூங்கினான்.

காலையில் வழக்கம் போல எந்திரிச்சான்.காலை கடன் எல்லாம் முடிச்சுட்டு குளிச்சிட்டு பெருமாளுக்கு சிட்டிகைச் சப்பரம் பண்ணனும் ன்னு சொல்லிட்டு நேரா கிளம்பி கோயிலுக்கு வந்தான்.பெருமாளோ அவனைப் பாத்துட்டே இருந்தார். ஆஹா நமக்கு சிட்டிகை சப்பரம் வரப்போகுது எப்படி கொண்டுவரான்னு  தான் பார்க்கலாம் ன்னு நினைச்சுட்டு இருக்கையில்  அவன் வெறுங்கையோட  வந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது.சரி என்ன தான் பண்றான் பாப்போம்னு பெருமாளும்  ஆவலா காத்திட்டு இருந்தாரு.

இவன் நேரா பெருமாள் கிட்ட வந்து வழக்கம் போல தொழுதான் .பெருமாளே உங்களுக்கு நான் சிட்டிகை சப்பரம் பண்றேன்னு  சொன்னேன்.இதோ நான் தரும் சிட்டிகை சப்பரம்  என்று சொல்லிட்டு (சிட்டிகை என்றால் கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்து சொடக்கு போடுவது தமிழில் சொடக்கு என்று சொல்வார்கள் அதற்கு சிட்டிகை என்றொரு பெயரும் உண்டு அந்த காலத்தில் தாத்தா சொல்வார் ஒரு சிட்டிகை மூக்குப் பொடி வாங்கிட்டு வாடா ன்னு. அந்தமாதிரி இரு விரலையும் சேர்த்து சத்தம் செய்வதற்குப் பெயர் சிட்டிகை. சப்பரம் என்றால் தேர். சொடக்கு போடுவது மூலம் தேரை உருவாக்குவதற்கு சிட்டிகை சப்பரம் என்று பெயர்).

அவன் உடனே கட்டை விரலையும் நடுவிரலையும் சொடுக்கி கீழிருந்து மேல்வரை சொடுக்கி இது ஒரு தேரின் கம்பம் மறு பக்கம் கையை கொண்டு சென்று இது மற்றொரு கம்பம் முன்னாடி பீடம் இது மற்றொரு பீடம் இது மேல்மாடம் இது பூமாலை இது அர்ச்சகர் அமரும் இடம் இது சக்கரம் இது மற்றொரு சக்கரம் என்று கையால் பெரிய தேரையே வடிவமைத்து விட்டு பகவானே நான் சொன்னபடி உனக்கு சிட்டிகை சப்பரம் செய்து விட்டேன் .நன்றி வருகிறேன் என்று அவன் கிளம்பி சென்றான்

பகவான் ஹேங்  என்று பார்த்துவிட்டு அசடு வழிந்து ஒரு பக்தன் நம்மை ஏமாற்றி விட்டானே என்று பரிதாபமாக முழித்துக் கொண்டிருந்தார்.

இதுதான் சிட்டிகைச் சப்பரத்தின் கதை

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்