கார்த்திகை மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது கார்த்திகை தீப மஹாத்மியம். 

ஒரு நாள் கைலாயத்தில் சிவனும் பார்வதியும் தனிமையில் இருந்த பொழுது பார்வதி விளையாட்டிற்காக சிவனின் கண்ணை ரெண்டு கைகளாலும் மூடினாள். உடனே உலகம் முழுவதும் இருண்டு விட்டது. பயந்து போன பார்வதி உடனே கையை எடுத்து விட்டாள். ஆனால் சிவன் கோபித்துக் கொண்டு நீ செய்தது தவறு அதற்கு பிராயச்சித்தமாக நீ கைலாயம் விட்டு பூலோகம் சென்று காஞ்சீபுரத்தில் தவமியற்றுவாயாக என்று கூறினார்.

பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் தவமியற்றிக் கொண்டு இருக்கும் போது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி அன்று தீபம் ஏற்றி தவத்தில் ஈடுபட்டார்.
பெளர்ணமி சந்திரனின் பிரகாசமான ஒளி தேவியின் தீப ஒளி அனைத்தையும் சேர்ந்து பார்த்து மகிழ்ந்த ஈசன் உடனே பார்வதிக்கு காடசி கொடுத்து இடப் பக்கம் ஏற்று அருளினார்.அந்த பெளர்ணமி தினத்தில் சிவனுடன் பார்வதி இணைந்த தினத்தை கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகிறோம்.

இது ஒரு வகை .சில பண்டிதர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் ஆச்சார்யர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள். அதையும் பார்ப்போமா.

மற்றோரு முறை சிவனும் பார்வதியும் கைலாயத்தில் இருந்த பொழுது மிகவும் இருட்டாக இருந்தது. அவர்களுக்கு முன் ஒரு சிறிய தீபம் ஒளி மங்கி எரிந்து கொண்டிருந்தது. அதில் உள்ள திரியைத் தின்பதற்காக ஒரு எலி அந்த தீபத்தை நோக்கி போயது. அந்த எலியின் முயற்சியில் தீபம் தூண்டி விடப்பட்டு இருள் மறைந்து பிரகாசமான ஒளி வீசியது. அதைக் கண்ணுற்ற சிவன் எலியிடம் நீ தீபத்தை ஒளிர் விடச் செய்ததால் அடுத்த பிறவியில் மஹாராஜா வாகப் பிறப்பாய் என்று கூறினார். அந்த மஹாராஜா வேறு யாரும் அல்ல சாட்சாத் மகாபலி சக்கரவர்த்தி தான்.

மகாபலி சக்கரவர்த்தி.

இவர் உடனடியாக சக்ரவர்த்தி ஆனதால் அதுவும் முற்பிறவியில் எலியாயிருந்து சக்ரவர்த்தி ஆனதால் செருக்கு மிகவும் அதிகமாக இருந்தது. தினமும் பட்டு வேஷ்டி பட்டு சட்டை கணக்கில்லலாத இத்யாதி ஆபரணங்களுடன் செருக்காக நடந்து தினமும் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபடலானார். ஒரு முறை அவ்வாறு செருக்குடன் சென்று பொழுது எந்த திரியைத் தூண்டி விட்டு மஹாராஜா ஆனாரோ அந்த தீபங்கள் கோவில் முழுவதும் ஏற்றப் பட்டிருந்தது. இவர் பட்டாடை தவழ தவழ தீபத்தை கவனிக்காமல் செருக்குடன் நடந்து சென்றார். உடனே தீபத்தில் இருந்த நெருப்பு அவர் பட்டாடையில் பட்டு மள மளவென தீ கொழுந்து விட்டு எரிந்து உடலெங்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயங்களுடன் அவஸ்தை படும் போது தான் அவருடைய செருக்கு அவருக்கு புரிந்தது. உடனே நிலைமையை உணர்ந்து பகவானை வேண்டி தனக்கு மன்னிப்பு அருளுமாறு கோரினார்.

அப்பொழுது பகவான் அசரீரியாக எந்த தீபத்தினால் உனக்கு வாழ்வு கிடைத்ததோ அந்த தீபத்தை நீ மதிக்காததால் தான் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அதற்கு பிராயச்சித்தமாக நாளை முதல் இந்த ஆலயம் முழுவதும் தினந்தோறும் தீபமேற்றி வழிபடுவாயாக நான் உனக்கு சமயத்தில் காட்சி தருவேன் என்று கூறினார். இவர் தினமும் தீபம் ஏற்றி வந்தார். இவ்வாறு இருக்கும் போது கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று சிவன் ஜோதிரூபமாய் காட்சி தந்து மகாபலியின் நோயை போக்கி அருளினார்.

அவ்வாறு அவர் தீக்காயங்களைப் போக்கி அவருக்கு அருள் தந்து கூறினார் நீ எவ்வாறு பெளர்ணமி அன்று கார்த்திகை மாதம் என்னை நினைத்து தீபமேற்றி வழிபட்டாயோ அதேபோல் உலகில் உள்ள அனைவரும் கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் நான் அவர்களுக்கு சகல செல்வங்களையும் ஐஸ்வர்யங்களையும் அழியாத புகழையும் தருவேன் என்று மகாபலியிடம் கூறினார்.

இதுவே கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று தீபம் ஏற்ற காரணம். இதுவே கார்த்திகை மஹாத்மியம்.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

நாளைய வரலாறு ஸ்ரீ னிவாச மஹாத்மியம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்