ஏர்ஃபோர்ஸ் டே அக்டோபர் மாதம் 8ம் தேதி
ஏர்போர்ஸ் டே
இன்று அக்டோபர் 8 ஏர்ஃபோர்ஸ் டே இந்த ஏர்போர்ஸ் டேயில் சில முக்கியமான ஏர்போர்ஸ் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலாவது.
1977 இந்திய நாட்டின் பிரதமராக திரு மொரார்ஜி தேசாய் அவர்கள் இருக்கிறார்கள். அப்பொழுது இந்திய விமானப்படையின் விமானத்தில் பிரதம மந்திரி அவர்கள் பயணிக்கிறார்கள். விமான பைலட் ஆக wg.cdr.d. leema என்று நினைக்கிறேன். விமானம் மேலே கிளம்பி சென்று கொண்டிருக்கும்போது விமானத்தில் பழுதாகிவிட்டது பழுதடைந்துவிட்டது.
விமானிக்கு வேறு வழியில்லை. விமானத்தை தரை இறக்க வேண்டும். ஆனால் நியாயமான முறையில் தரையில் இறக்க முடியாது. விமானம் பொத்தென்று தரையில் விழ வேண்டும். அவ்வாறு விழுந்தால் பிரதம மந்திரியின் உயிர் அக்கணமே போய்விடும். விமானி என்ன செய்தார் தெரியுமா.?? அந்த விமானம் tyle end என்று சொல்லப்படும் பின்பக்கம் தான் பூமியில் தொட வேண்டும். ஆனால் பிரதம மந்திரியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் nose end என்று சொல்லப்படும் மூக்குப்பகுதி முன் பகுதியை பூமியில் குத்தி பின்பகுதியை தூக்கி வைத்து பிரதம மந்திரியை காப்பாற்றினார். உடனே அவரை காப்பாற்ற அனைவரும் சென்ற பொழுது ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் (How is PM)ஹவ் ஈஸ் பி எம் fine no problem என்று சவுண்ட் காதில் கேட்டதோ இல்லையோ உடனே மரணித்தார். இத்தகைய வீரதீரச் செயல்கள் புரிந்த ராணுவ வீரர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இருந்தார்கள். என்று நாம் பெருமைப்பட வேண்டும் அவருக்கு இந்தியா பரம்வீர் சக்ரா வழங்கியது.
ரெண்டாவது.
1971 பாகிஸ்தான் இந்தியா போர் நடந்து கொண்டிருக்கிறது .ஆக்ரா கேன்பரா (Canberra) விமானங்கள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .ஒன்லி பார் bombing என்று சொல்லும் குண்டு மழை பொழிவதற்கான விமானம் அது. அங்கிருந்து புறப்பட்டு இரண்டு விமானங்கள் பாகிஸ்தானில் குண்டு மழை பொழிந்து விட்டு திரும்பி வருகிறது .அதை ஓடுதளம் runway என்று சொல்வார்களே அது.தவிர அதற்கு பாயிண்ட் வைத்திருப்பார்கள் பாயிண்ட் டூ பாயிண்ட் ஒன்று என்றெல்லாம்.அந்த நேரத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்குகிறது. டவரிலிருந்து(Tower where rador fixed to watch the flights) பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டும் நேருக்கு நேராக ஆப்போசிட் டைரக்ஷனில் வந்து கொண்டிருந்த து.ஒன்றுக்கொன்று எதிர்த்து வருகிறது .வினாடி நேரத்தில் இரண்டும் மோதி தூள் தூளாகும் நாசமடையும் டவரில் இருப்பவருக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. Spur of the moment என்று சொல்வார்களே அதுபோல அந்த நேரத்தில் அவர் ஒரு கமாண்ட் (command) கொடுக்கிறார்.அதாவது இருவரும் உங்களின் வலதுகை பக்கமாக திரும்புங்கள் என்று. Both turn towards your right side என்று. நினைத்துப்பாருங்கள் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் என்றால் opposite direction. அதேநேரம் எதிரில் இருந்து வரும்போது வேறு வழியாக just opposite direction போய்விடும். ஒரு சிங்கிள் கமாண்டின் மூலம் இரண்டு விமானத்தையும் காப்பாற்றி பைலட்டையும் காப்பாற்றிய அவருக்கும் உயர்ந்த விருது வழங்கப்பட்டது இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
மூன்றாவது.
இதை இங்கு பதிவிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன் .இருந்தாலும் விமானப்படை சம்பந்தப்பட்டது என்பதால் இங்கு பதிவிடுகிறேன். காரணம் இது அரசியல் சார்ந்தது. 1980ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பழனியில் வந்து சி சுப்பிரமணியமும் சென்னையில் ஆர் வெங்கட்ராமன் அவர்களும் போட்டியிடுகிறார்கள்.நாலாம் தேதி தேர்தல் பழனியில் முடிந்து விட்டது சென்னையில் ஏழாம் தேதி தான் தேர்தல்.
அந்தக் காலத்தில் காங்கிரசுக்கு உள்ள போட்டி மனப்பான்மையைப் பாருங்கள் .சி.சுப்பிரமணியம் சொல்கிறார் நான் ஜெயித்திடுவேன் வெங்கட்ராமன் சென்னையில் நிற்கிறார் அவரும் ஜெயித்து விட்டால் அவருக்கு தான் மந்திரி பதவி கிடைக்கும். எனக்கு கிடைக்காது .அதனால் அவர் தோற்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று பழனியில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து ஏற்பாடு செய்து சென்னையில் வெங்கட்ராமனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யச்சொன்னார். ஆனால் ஆர். வெங்கட்ராமன் வெற்றி பெற்று விட்டார். 1980 ல் மீண்டும் இந்திரா காந்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
வெங்கட்ராமன் ஜெயித்தவுடன் இந்திராகாந்தி அவருக்கு உடனடியாக பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை தந்தார். அப்போது இந்திரா காந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தி உயிருடன் இருக்கிறார் . மாருதிஎன்று சொல்லப்படுகிற சிறிய கார் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இன்று இவ்வளவு பெரியதாக வளர்ந்து இருக்கும் மாருதி கார் தொழிற்சாலை 1980ல் இடம் தேர்வு செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது.
maruti க்கு இடம் தேடிய பொழுது குர்காவ்னில் (Gurgavoon)ல் மாருதி தொழிற்சாலைக்கு என அமைந்த இடம் பத்தவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த சஞ்சய் காந்தி தொழிற்சாலையின் அருகில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ஏர்போர்ஸ் யூனிட்க்கு சொந்தமான ரஜோக்ரி (Rajokri is a Airforce unit)உள்ளது அங்கு ஏகப்பட்ட நிலம் காலியாக இருந்தது.அருகிலுள்ள காலி இடங்களையும் மாருதிக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு ஃபைல் தயார் செய்து அதை நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமனிடம் வருகிறது. அவர் அந்த இடத்தை தர முடியாது என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கிறார். it belongs to Defence area we are not supposed to touch that land என்று கூறுகிறார்.உடனே சஞ்சய் காந்தி நேரில் வந்து வெங்கட்ராமனைப் பார்த்தது பேசுகிறார். ஆனால் அவருக்கும் அதே பதிலைத் தருகிறார்.
உடனே சஞ்சய் காந்தி தன் தாயார் இந்திரா காந்தியிடம் சொல்ல அடுத்த நாள் வெங்கட்ராமன் பாதுகாப்புத் துறையில் இருந்து தூக்கி finance ministry க்கு மாற்றப்படுகிறார். இந்தியாவின் நிதி அமைச்சராக வெங்கட்ராமன் பொறுப்பேற்கிறார். அதேசமயம் பாதுகாப்புத்துறைக்கு பன்சிலாலை பாதுகாப்புத்துறை அமைச்சராக ஆக்குகிறார் இந்திரா காந்தி. பொறுப்பேற்றவுடன் ஃபைல் அப்ரூவல் செய்யப் பட்டு சஞ்சய்காந்தி இடம் வருகிறது . இந்த நடவடிக்கை மூலம் ஏர்போர்ட்ஸ் ராஜோக்ரி இடம் எந்தவித இடைஞ்சலோ தொந்தரவோ பண பரிமாற்றமோஇன்றி அழகாக மாருதி தொழிற்சாலையுடன் இணைக்கப்பட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகள் வெளியுலகத்திற்கு தெரியாது என்ற காரணத்தினால் இதை வெளிக்கொணர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். 1980 ஆம் வருடம் நான் டெல்லியில்தான் இருந்தேன்.இது அனைத்தும் இந்திய விமானப்படையில் தில்லியில் இருந்தவர்களுக்கு அனைவருக்கும் தெரியும்.
சாதனை புரிந்தவர்கள் விமானப்படையில் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் .மேற்கூறிய நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறி என் உரையை இத்துடன் முடிக்கிறேன் நன்றி வணக்கம்
Comments
Post a Comment