ஏர்ஃபோர்ஸ் பாகம் 2

நேற்றைய பதிவின் தொடக்கம்.   அடுத்த நாள் டிரெய்னிங் ஆரம்பம்.காலை 5 மணிக்கு விசில் அடித்து எழுப்பி விட்டார்கள்.(இங்கு இப்பொழுது முன் கூட்டியே training programs and training working hours குடுத்தால் further படிப்பதற்கு எளிமையாக இருக்கும். காலை 5 மணிக்கு பெட் காபி. 5.30 to06.30 health run. 6.30 to 7.15 shaving bathing clothes uniform ironing shoes polishing and eating breakfast. Exact 7.20 March fast to parade ground 7.25 attendance.7.30 training starts.  முதலில் பேரேடு சில சமயம் துப்பாக்கி யுடன் ஓட்டம் தண்டனை பேரேடு அனைத்தும் 10.15 வரை.10.15 to 10.30 tea and snacks . again 10.30 to 13.30 education class subject wise. Then 1.30 to 2.30 lunch. Then rest up to 3.45. இந்த நேரத்தில் தான் துணிகள் துவைப்பது பாலீஷ் போடுவது முதலியன அரங்கேறும். பின் 4 மணி முதல் P T drill up to 5.30, then bathing and dinner from 6to6.45 pm and exact 7.to 9 studying class.and exactly 9.15 to bed. தூக்கம் வருதோ இல்லையோ 9.15 மணிக்கு விளக்குகள் அனைத்தும் அனைத்து படுத்துவிட வேண்டும் இது தான் டிரெய்னிங் ரூல்ஸ்)

காலை தினமும் கம்பெல்சரி சேவிங் இல்லை என்றால் தண்டனை யூனிபார்ம் நீட்டா இருக்கனும் ஷூ பாலீஷ் செய்து ப்ளீச் என்று இருக்கனும் இல்லை என்றால் தண்டனை. இதற்கு ஏன் தண்டனை என்றால் ஒரு மிலிட்டரி மேன் சுத்தமாக ஷேவ் செய்து நல்ல யூனிபார்ம் நீட்டா போட்டு நல்லா பாலீஷ் போட்டு ஸ்மார்ட் ஆ இருக்க வேண்டும் என்பதால் தான்.

ஒகே ஒகே நான் போன பதிவில் ஏண்டா அனைத்தும் வாங்கினோம் காரணம் கூறுகின்றேன் என்று கூறியிருந்தேன் அல்லவா. அதாவது சாயந்திரம் ஆனால் படுக்குமுன் கண்டிப்பாக கொசுவலை கட்டிக் கொண்டு தான் படுக்க வேண்டும் இல்லை என்றால் தண்டனை.மேலும் சாயந்திரம் ஆனால் முழுக்கை சட்டை தான் அணிய வேண்டும் இல்லை என்றால் தண்டனை.

இதற்கு காரணம் மிலிட்டரி கேம்ப் உள்ள இடம் அனைத்தும் காடுகள் நிறைந்த பகுதி. பாம்பு பல்லி தேள் பூரான் முதலியவைகள் இஷ்டம் போல் இருக்கும் மேலும் கொசு நிறைய இருக்கும் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உடல் நோய் வராமல் தடுக்கவும் தான். தண்டனை இல்லை என்றால் யாரும் அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தான்.

பின் காலையில் எழுந்து கொடுத்த கொசுவலையை அவிழ்த்து நீட்டாக மடிக்க வேண்டும்.பின் கம்பளியை மடிக்க வேண்டும் (அந்தக் கம்பளியைத் தூக்கி மடிப்பதே தண்டனை தான் ஒரு நோஞ்சானால் அதைத் தூக்கவை முடியாது) பின் பெட்ஷீட்டை மடிக்க வேண்டும். பின் முதலில் கொசுவலை பின் கம்பளி அதன்மேல் பெட்ஷீட் என்று வரிசைக் கிரமமாக வைக்க வேண்டும்.வரிசை மாறினால் தண்டனை.பின் கட்டிலின் ஓரத்தில் ஷீ பின் அடுத்த ஓரத்தில் கேன்வாஸ் .பின் கட்டிலின் மேல் பிளேட் மக் அனைத்தும் வரிசையாக வைத்து விட்டு தான் வெளியே போக வேண்டும்.இத்தனையும் 6.30 முதல் 7.15 க்குள் மற்ற வேலைகளுக்கு மத்தியில் செய்ய வேண்டும்.இதுவும் டிரெய்னிங் ரூல்ஸ் உடன் சேர்த்தி இந்த எக்ஸர்சைஸ் க்கு பெயர் KIT LAY OUT என்று பெயர். அதாவது உனது கிட்டை பொருள்களை நீட்டாக மடித்து ஒழுங்காக வைக்க வேண்டும்.  (இப்பொழுது புரிகிறதா நான் ஏண்டா வாங்கினோம் என்று கூறினேன் என்று)  .

மீதி நாளை தொடரும்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்