ஏர்ஃபோர்ஸ் 1

எனது முந்தைய லட்சிய பதிவில் நான் ஏர்போர்ஸில் சேர்ந்த விவரத்தைப் பற்றி கூறியிருந்தேன்.  அதைப் படித்த நிறைய மத்தியமர் நண்பர்கள் அதற்குப் பிறகும் நடந்த நிகழ்வுகளையும் பற்றி கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதற்கிணங்க சற்று ஏறத்தாழ 46 வருடங்களுக்கு முன் (2018_1972=46) நடந்த ... நிகழ்வுகளை (சில நிகழ்வுகளை) ஞாபகத்துக்கு கொண்டு வந்து எழுதலாம்  என்று இருக்கிறேன்.    

                   தொடர்ந்து எழுதுவது என்பது அட்மின் அப்ரூவ் செய்வதைப் பொறுத்து இருக்கிறது  .

1. மே மாதம் 10ம் தேதி 1972ம் வருடம் சென்னையில் இருந்து புறப்பட்டு குண்டக்கல் வழியாக ஹூப்ளி சென்று சேர்ந்தோம்.மீண்டும் இரவு 1 மணிக்கு தான்  train . Night Time இருந்ததால் ஒரு ஹிந்திப் படம் பார்த்தோம் பெயர்  Harjeet  மெஹபூப் hero ( பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த நாகேஷ் ஹீரோ வாக நடித்த தாமரை நெஞ்சத்தின் இந்திப் பதிவு தான் இது)

பின் இரவு 1 மணிக்கு டிரெய்ன் பிடித்து பம்பாய் போய்ச் சேர்ந்தோம். பம்பாயில் 1972 ல் எங்கு சென்றாலும் நான் வெஜ் ஹோட்டல் தான் வெஜ் ஹோட்டல் அறவே கிடையாது போல . (இன்று போல் அல்ல 46 வருடங்களுக்கு முன்பு)  நானோ பக்கா வெஜிடேரியன். ஒன்றும் கிடைக்காமல் இரவு பழங்களைச் சாப்பிட்டு படுத்து கொண்டேன். மறுநாள் கல்யாணில் ஒரு பிராமணாள் ஓட்டல் உள்ளது என்றும் 12 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டோக்கன் வாங்கி 1மணிக்கு சாப்பிட்டு வரலாம் என்று கூறியதால் அது போலவே செய்தேன்  ( பின்னாளில் ஏர்போர்ஸில் சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க வேண்டும் என்பதை இங்கு தான் அட்வான்ஸ் டிரெய்னிங் எடுத்துக் கொண்டேன்)

பின் இரவு 7 மணிக்கு டிரெய்ன் பிடித்து 12ம் தேதி மாலை பெல்காம் வந்து சேர்ந்தோம். மிலிட்டரி வேன் வந்து எங்களை கேம்பிற்கு அழைத்துச் சென்றது. இரவு உணவு முடித்து பின் மிகவும் டயர்டு ஆக இருந்ததால் உறங்கி விட்டோம்.  ( இருடி உனக்கு நாளைக்கு கச்சேரி இருக்கு என்று அப்போது விதி கூறியதை மனம் அறியவில்லை).

13.5.1972  எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்.காரணம் நான் ஏர்போர்ஸில் சேர்ந்த நாள்.

காலையில் அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து  orderly room க்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அனைவருக்கும்  service number or roll number allot செய்தார்கள்..
மேலும் ஒரு கம்பளி ஒரு கொசுவலை ஒரு பிளேட் ஒரு மக்(mug) ரெண்டு பெட்ஷீட் ரெண்டு செட் யூனிபார்ம்  one parade shoe or badaa Boot one normal shoe and one canvas shoe  முதலியவைகளை குடுத்தார்கள். வாங்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது. மறுநாள் தான் ஏண்டா வாங்கினோம் என்று இருந்தது காரணம் ( ஒரு சிறிய ராமாயணக் கதை. ராமாயணத்தில் தசரதன் ச்ரவணை மிருகம் என்று நினைத்து அம்பு எய்து கொன்று விடுவார். பின் அவன் தந்தை என் மகன் இறந்து வயதான காலத்தில் தனிமையில் வாடி நான் இறப்பதைப் போல் நீயும் புத்திர சோகத்தால் மடிவாய் என்று கூறி அவர் மடிந்து விட்டார் ‌.அப்போது அதைக் கேட்டு தசரதன் மிகவும் மகிழ்வான் காரணம் எனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று நினைத்தேன் ஆனால் புத்திரன் உண்டாகும் என்று கூறிவிட்டாரே என்று அகமகிழ்வான்.) அது போல அனைத்து பொருட்களும் வாங்கிய போது நாங்களும்ஓ மகிழ்ந்தோம்.(மீதி நாளை தொடரும்)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்